அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு 10,000 கோடி டாலருக்கு கீழ் சரிவைக் கண்டுள்ளது.
அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதிமுறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. உலகின் பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டார் அதானி. இதையடுத்து அதானி குழுமத்தின் தலைவரான கெளதம் அதானி பல்வேறு விளக்கங்களை கொடுத்தார். பின்பு அதானி நிறுவனம் பங்கு வெளியீட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இருப்பினும் இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு 10,000 கோடி டாலருக்கு கீழ் சரிந்தது. முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த அதானி நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் சட்ட நிபுணர் குழு ஒன்றை அதானி குழுமம் நியமித்தது. செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஆனால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வருவதால் அதானி குழுமத்தின் நிறுவனங்கள் தொடர் சரிவை கண்டன. இதனால் அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களையும் சேர்த்து மொத்த சந்தை மதிப்பு 10,000 கோடி டாலருக்கு கீழ் குறைந்துள்ளது.
அண்மைச் செய்தி: பாகிஸ்தான் மண்ணில் இருந்து கொண்டே பாகிஸ்தானை விமர்சித்த இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர்!
ரேட்டிங் நிறுவனங்களும் அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனங்களுக்கான மதிப்பீடுகளை மறுவரையறை செய்துள்ளன. இன்றைய வர்த்தகத்தில் அதானி எண்டர்பிரைசஸ் 3 சதவீதம் வரை சரிவைக்கண்டது. அதானி டோட்டல் கேஸ் 5 சதவீதம் வரை சரிவைக் கண்டது.