மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு தொடர்புடைய குற்றவாளிகள் உங்கள் நாட்டில் சுதந்திரமாக சுற்றுகின்றனர் என்று பாகிஸ்தானில் நடந்த விழாவில் பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான ஜாவேத் அக்தர் பேசியுள்ளார்.
பாகிஸ்தான் லாகூரில் உருது கவிஞர் பைசி அகமதுவின் நினைவை போற்றும் வகையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் இந்தியாவைச் சேர்ந்த உருது கவிஞரும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் கலந்து கொண்டார். அந்த விழாவில் ஜாவேத் அக்தர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: இந்தியா – சிங்கப்பூர் இடையே எளிமையாகிறது பணப்பரிமாற்றம் – திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி
அந்த விழாவில் ஜாவேத் அக்தர் பேசியதாவது: இரண்டு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றம் சொல்லிக் கொள்வதால் பிரச்னைகள் தீர்ந்து விடாது. இருநாடுகளுக்கும் இடையே பிரச்னை இருக்கிறது. அதை தீர்க்க வேண்டும். மும்பையை சேர்ந்த நாங்கள், தாக்குதல் நடந்ததை நேரடியாக பார்த்தோம். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் நார்வேயிலிருந்தோ அல்லது எகிப்திலிருந்தோ வரவில்லை. அவர்கள் இன்னமும் உங்கள் நாட்டில்தான் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கின்றனர். இந்துஸ்தானியாக இருந்தால் அவருக்கு நிச்சயம் கோபம் வரும். அதை நீங்கள் குற்றம் சொல்லமுடியாது. இந்திய கலைஞர்கள் பாகிஸ்தான் வருகையில் அவர்களுக்கு சரியான முறையில் வரவேற்பு கிடைப்பதில்லை. ஆனால் பாகிஸ்தான் கலைஞர்கள் இந்தியாவுக்கு வரும் போது அவர்கள் உரிய முறையில் வரவேற்கப்படுகின்றனர். இவ்வாறு ஜாவேத் அக்தர் பேசினார்.
ஜாவேத் அக்தர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவரது பேச்சை பாகிஸ்தானில் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.