திபெத்தில் 7.0 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 16 பேர் உயிரிழப்பு!

சீனாவின் திபெத் பகுதியில் 7.0 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவின் திபெத் பகுதியில் நேற்று இரவு சுமார் 10:33 மணியளவில், நகு நகரத்தின் பாகென் கவுண்டியில் 10 கிலோமீட்டருக்கும் குறைவான ஆழத்தில் 7.0 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான குடியிருப்புகள் சேதமடைந்தன.

இந்த நிலகநடுக்கத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 76 பேர் காயமடைந்து சிகிச்சி பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 12,489 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுடன், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை மீள்குடியேற்றும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் பிராந்திய தலைநகரான லாசாவிலிருந்து அரசுக்குச் சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சீனா அவசரகால பேரிடர் நிவாரண நிதியாக 50 மில்லியன் யுவானையும், மீட்புப் பணிகளுக்காக மேலும் 30 மில்லியன் யுவானையும் ஒதுக்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.