முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நடிகை குஷ்பு வீண் வம்பை விலைக்கு வாங்குகிறார் – முரசொலியில் கட்டுரை

பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் முதலமைச்சர் குறித்து தனிப்பட்ட விமர்சனங்களை வைத்த நடிகை குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்து முரசொலியில் கட்டுரை வெளிவந்துள்ளது.

 

திமுக நாளேடான முரசொலியில் இன்று வெளியான கட்டுரையில், நடிகை குஷ்பு அரசியலில் ஈடுபட்ட குறைந்த காலத்தில் நிறைய கட்சிகளுக்குத் தாவி சென்றுள்ளார் என தெரிவித்துள்ளது. அவர், தேவையில்லாமல் தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் குறித்து பேசி வீண் வம்பை விலைக்கு வாங்கியுள்ளார். ஒன்றிய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதம் மாதம் ஏற்றிய போதும், பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்திக்கொண்டே இருந்த போதும், அதன் விளைவாலும், ஜி.எஸ்.டி. போன்ற ஒழுங்கு முறைப்படுத்தாத வரிவிதிப்பாலும், விலைவாசி ஏறியபோதெல்லாம் எரியாத வயிறு. ஏழைகளைப் பாதிக்காத வகையில் பால் விலையை ஏற்றி, பால் முகவர்களுக்கு விலையை உயர்த்தியுள்ளது கண்டு எரிகிறதாம் என குஷ்பு சுட்டிக்காட்டியதாக முரசொலி தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுக பேச்சாளர் ஒருவர் குஷ்பு குறித்து பேசுகையில் குறிப்பிட்ட சில வார்த்தைகள், அவர் மனதைப் புண்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டபோது, அந்தப் பேச்சாளர் கண்டிக்கப்பட்டார். அவர் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கப் பணிக்கப்பட்டு வருத்தமும் தெரிவித்தார். துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, அந்த பேச்சுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். அந்த பேச்சாளர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்கிற குஷ்பு, எச்.ராஜா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்டாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. அவர் பேசியதற்காக, அமித்ஷாவும், பிரதமர் மோடியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஷ்பு கேட்டாரா? அல்லது இனியாவது கேட்பாரா? என தெரிவித்துள்ளது. குஷ்பு பேச்சைப் பொருட்படுத்தக் கூடாது என்று இருந்தோம்.

கொஞ்சம் அளவுக்கு மீறி வாய் நீளம் காட்டத் தொடங்கிவிட்டதால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதற்காக சிறிய விளக்கங்களைப் பதிவாகப் பதிவு செய்துள்ளோம் என்றும் குஷ்பு இதனை புரிந்து கொண்டு நடப்பார் என எண்ணுவதாகவும் முரசொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வாரிசு பட பர்ஸ்ட் லுக் சர்ச்சை; ஓட்டோ நிறுவனம் விளக்கம்

G SaravanaKumar

வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் உத்தரவு

Halley Karthik

உக்ரைன் குழந்தைகளுக்காக நோபல் பரிசை விற்ற ரஷ்ய பத்திரிக்கையாளர்

Web Editor