26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

மும்பை போலீசாரிடம் மன்னிப்புக் கோரிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், காதலர் தினத்தில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் முகக்கவசம், தலைகவசம் அணியாமல் சென்ற வழக்கில் மும்பை காவல்துறையினரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் அவரது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணியாமல் மும்பை நகரத்தில் பயணம் செய்துள்ளார். அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருந்து வரும் நிலையில், அரசின் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை மீறி விவேக் ஓபராய் முகக்கவசம், தலைகவசம் ஆகியவற்றை அணியாமல் சாலையில் பயணித்தது குறித்து அறிந்த மும்பை காவல்துறையியனர், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி அவர் மீது வழக்குப்பதிவு செய்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இந்நிலையில், நடிகர் விவேக் ஓபராய், தனது செயல் குறித்து ட்விட்டரில் மன்னிப்புக் கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் கூறியதாவது, “தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதிற்கு மும்பை காவல்துறையினர் செக் மேட் வைத்துள்ளனர். எனது இந்த செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் மேலும் என் தப்பை எனக்கு உணர்த்தியதற்கு மும்பை காவல்துறையினருக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Halley Karthik

100 நாள் வேலைத்திட்ட ஊதியம்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

EZHILARASAN D

தலிபான்களால் மோசமாக சிதைக்கப்பட்ட டேனிஷ் சித்திக்கின் உடல்: அதிகாரிகள் அதிர்ச்சி

Gayathri Venkatesan