மாஸ்க்கை மறந்த அதிபரின் மாஸ் செயல்

ஜெர்மன் நாட்டு அதிபர் அங்கெலா மெர்க்கெல் மாஸ்க் அணிய மறந்ததை உணர்ந்ததால் அதிர்ச்சியடைந்து இருக்கையில் இருந்து எழுந்த காட்சி இணையத்தில் வைரலாகிறது. சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா பரவத்தொடங்கியது. இதைத்தடுப்பதற்காக…

ஜெர்மன் நாட்டு அதிபர் அங்கெலா மெர்க்கெல் மாஸ்க் அணிய மறந்ததை உணர்ந்ததால் அதிர்ச்சியடைந்து இருக்கையில் இருந்து எழுந்த காட்சி இணையத்தில் வைரலாகிறது.

சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா பரவத்தொடங்கியது. இதைத்தடுப்பதற்காக அனைத்து நாடுகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. இந்நிலையில், ஜெர்மனி நாட்டில் தற்போது கொரோனா 2வது அலை தற்போது பரவத்தொடங்கியுள்ளது. கடந்த 5 முதல் 18 வரையிலான 14 நாட்களில் மட்டுமே சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அந்நாட்டு அதிபர் அங்கெலா மெர்க்கெல் பங்கேற்றார். அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த அவர், தான் மாஸ்க் அணியாமல் இருப்பதை உணர்ந்து உடனடியாக இருக்கையில் இருந்து எழுந்து போடியத்திற்கு சென்று மாஸ்க் எடுத்து அணிந்தார். இந்தக்காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.