கல்வி மீது வெறுப்பும், பயமும் குழந்தைகளுக்கு ஏற்படாத வகையில் கல்வித் திட்டங்கள் அமைய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இனமானத்தை காக்கவே தாம் அரசியலுக்கு வந்ததாகக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பண்டைய தமிழரின் நீர்மேலாண்மை முறையை பின்பற்ற வேண்டும் எனக் கூறிய சீமான், சுற்றுச் சூழலை பாதிக்காத தொழில்களை நாம் தமிழர் கட்சி ஆட்சியில் ஊக்கப்படுத்துவோம் என்றார். 100 நாள் வேலைத் திட்டம் என்பது பயனற்ற திட்டமாக தற்போது உள்ளதாகவும் சீமான் விமர்சித்தார்.
தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வியைத்தான் இலவசமாக வழங்குவோம் என்றும் அவர் கூறினார். ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசமாக வழங்கப்படும் என்று கூறிய சீமான், கல்வி மீது குழந்தைகளுக்கு வெறுப்பும் பயமும் வந்துவிடக் கூடாது எனத் தெரிவித்தார். தென்கொரியாவில் 8 வயதில்தான் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதாகவும், ஆனால் இந்தியாவில் 8 வயதிலேயே பொதுத் தேர்வு எழுதும் சூழ்நிலை உருவாக்கப்படுவதாகவும் சீமான் விமர்சித்தார்.