ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ திட்டம்!

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை, செப்டம்பர் 15 ஆம் தேதி முதல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்…

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை, செப்டம்பர் 15 ஆம் தேதி முதல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா, கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கியது. சென்னை, மும்பையில் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் டெல்லி, அகமதாபாத்தில் இதர ஆட்டங்கள் நடைபெற்ற போது, சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, வீரர்களின் பாதுகாப்பு கருதி, போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இந்தத்தொடரில் 29 ஆட்டங்கள் நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள 31 ஆட்டங்கள் இன்னும் நடைபெற உள்ளன.

இந்நிலையில் எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன் நடத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து மீதமுள்ள ஆட்டங்களை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.