மதுரை காப்பகத்தில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் செயல்பட்டு வந்த இதயம் அறக்கட்டளை மூலமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாக சமூக ஆர்வலர் அசாருதீன் போலீசாருக்கு புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அறக்கட்டளை தலைவர் சிவக்குமார், குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதிகள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக 4 பேர் மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

இதையடுத்து, புகார்தாரரான சமூக ஆர்வலர் அசாருதீன், மருத்துவர்கள் மற்றும் குழந்தைகளின் தாயார்கள் உள்ளிட்டோர் மாநில மனித உரிமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். மேலும் குழந்தையின் தாய்களிடமும் மனித உரிமை ஆணைய தலைவர் விசாரணை நடத்தினார்.







