முக்கியச் செய்திகள் இந்தியா

திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம்: கடைக்காரருக்கு அபராதம்

திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் வழங்குவது குற்றம் என்று மும்பை உயர்நீதிமன்ற கிளைத் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் ஸ்ரீகிருஷ்ணா தவாரி (54). கடை வைத்திருக்கும் இவர், திருமணமான 45 வயது பெண் ஒருவர் மீது காதல் வயப்பட்டார். பின்னர் அவருக்கு கவிதைகளை கொண்ட காதல் கடிதம் கொடுத்தார். அந்தப் பெண் அதை நிகாரித்தும் தொடர்ந்து இதுபோன்று செய்துகொண்டிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிறகு அந்தப் பெண்ணை நோக்கி ஆபாச சைகையையும் செய்துள்ளார். தான் செய்ததை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்தப் பெண், அவர் மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த சம்பவம் நடந்தது 2011 ஆம் ஆண்டு.

விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், காதல் கடிதம் கொடுத்தவருக்கு 2 வருடம் கடுங் காவல் தண்டனையும் அபராதமும் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர், மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் முறையீடு செய்தார்.

அதை விசாரித்த நீதிமன்றம், திருமணமான பெண்ணின் மீது காதல் கடிதத்தை வீசுவது அந்த பெண்ணை அவமானப்படுத்தும் செயல். மனுதாரர் ஆபாச செய்கைகளையும் செய்துள்ளார். கடிதம் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டவும் செய்துள்ளார். எனவே பெண் ணிடம் அவமானப்படுத்தும் விதமாக நடந்த குற்றத்திற்காக மனுதாரருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ. 90 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. அதில் ரூ.85 ஆயிரத்தை அந்த பெண்ணிற்கு அவர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு முதலமைச்சருக்கு கடிதம்

Dinesh A

மதுரை : சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்ததுமே ஏமாற்றிய பெண்ணையே திருமணம் செய்த இளைஞர்

Dinesh A

தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்காலத் தடை

Web Editor