மதுரையில் மீட்கப்பட்ட குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

மதுரையில், ஆதரவற்றோர் மையத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு மீட்கப்பட்ட 2 குழந்தைகள் மருத்துவ பரிசோதனைக்குப் பின், மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன. மாவட்ட குழந்தைகள் நலக்குழு குழந்தைகளை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மதுரையில் ஆதரவற்றோர்…

மதுரையில், ஆதரவற்றோர் மையத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு மீட்கப்பட்ட 2 குழந்தைகள் மருத்துவ பரிசோதனைக்குப் பின், மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன. மாவட்ட குழந்தைகள் நலக்குழு குழந்தைகளை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மதுரையில் ஆதரவற்றோர் மையத்திலிருந்து விற்பனை செய்யப்பட்ட இரு குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 குழந்தைகளுக்கும் கொரோனா உள்ளிட்ட 14 விதமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்தது. இதனையடுத்து அந்த குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன. இதற்கிடையே மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே, செயல்பட்டுவந்த இதயம் அறக்கட்டளையின் கிளை அலுவலகத்தில் அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

அப்போது, அலுவலகத்தில் இருந்த வருகை பதிவேடு, ஆதரவற்றோர் மீட்கப்பட்ட விவரங்கள் ஆகிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த அலுவலகத்தில், ஆதரவற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, ஊசி செலுத்துவது போன்ற செயல்கள் நடைபெற்றுள்ளதும், சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், மதுரை ரிசர்வ்லைன் பகுதியில் சீல் வைக்கப்பட்ட ஆதரவற்றோர் மையத்தில் உள்ள ஆவணங்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற அடிப்படையில் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.