சென்னையில் தனியார் பள்ளி மீது மதமாற்றம் செய்வதாக குறித்த குற்றச்சாட்டிற்கு நடவடிக்கை எடுக்க கோரி தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குனருக்கு தேசிய குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு நல ஆணையத்தின் தலைவர் பிரியங் கணுங்கா கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை இராயப்பேட்டையில் இயங்கி வரும் சிஎஸ்ஐ மோகனன் கிறுத்துவ பள்ளி விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை கிறுத்துவ மதத்தை பின்பற்ற பள்ளி நிர்வாகம் வற்புறுத்துவதாகவும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பிரியங்கணுங்கா தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், சென்னை ராயப்பேட்டையில் இயங்கி வரும் சிஎஸ்ஐ மோகனன் மகளிர் மேல்நிலைப்பள்ளியுடன் இணைக்கப்பட்ட விடுதியில் கடந்த 6ஆம் தேதி அன்று தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் நல ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார் உள்ளிட்டோர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டதையும், பள்ளியுடன் இணைக்கப்பட்ட மாணவிகள் விடுதி பதிவு செய்யாமலும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இன்றியும் நடத்தப்படுவதாக மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்ததாகவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு முடித்து சென்ற பிறகு மாணவிகள் துன்புறுத்தப்படுவதாகவும் அவர்களை அடுத்த 24மணி நேரத்தில் மீட்க வேண்டும் என்றும், விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் கிருத்துவ மதத்தை பின்பற்ற நிர்வாகம் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு தஞ்சை அருகே மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட பின்னணியில் மதமாற்ற சர்ச்சைகள் எழுந்தன இருப்பினும் மாணவியின் உயிரிழப்புக்கு மதமாற்றம் காரணம் இல்லை என தெரியவந்தது. இத்தகைய சூழ்நிலையில் மீண்டும் சென்னையை சேர்ந்த கிறிஸ்தவ பள்ளி மாணவிகளை கிறிஸ்தவ மதத்தை பின்பற்ற வலியுறுத்துவதாக எழந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.