பாடலாசிரியர் கபிலன் மகள் விபரீத முடிவு – போலீஸ் விசாரணை

திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை வீட்டில் உயிரை மாய்த்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.   கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், 50-க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். அவரது மகள்…

திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை வீட்டில் உயிரை மாய்த்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், 50-க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். அவரது மகள் தூரிகை எம்.பி.ஏ. படித்துள்ளார். மேலும் ஆடை வடிவமைப்பகம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மாலை தூரிகை அவரது அறையில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர். கதவை திறந்து பார்த்தபோது, மின்விசிறியில் அவர் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

 

பின்னர் அவரை மீட்டு சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் தூரிகையின் உடல் உடற்கூறாய்வு செய்வதற்காக கீழ்பாக்கத்தில் உள்ள கே.எம்.சி. அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

 

தகவலறிந்து வந்த அரும்பாக்கம் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். தூரிகைக்கு அவரது பெற்றோர் அண்மையில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாகவும் அதனை அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் உயிரை மாய்த்து கொண்டது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் யாரையாவது காதலித்து வருகிறாரா? அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பாடலாசிரியர் கபிலன் மகள் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

உயிரிழப்பு எதற்கும் தீர்வாகாது என்பதை வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ் பல்வேறு விழிப்புணர்வு முன்னெடுப்புகளை வழங்கி வருகிறது. யாரும் உயிரிழப்பு எண்ணத்தை கையில் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.