“நீட் தேர்வை ஒழிப்பதே நிரந்தரத் தீர்வு..!” – மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வை ஒழிப்பது மட்டுமே, இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் ஒரு நிரந்தரத் தீர்வாகும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும் முன்னாள் முதலமைசருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம், தற்போது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது.

பெரிய அளவிலான முறைகேடுகள் நடைபெறக் கூடிய வகையில் நீட் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது என நாங்கள் தான் முதலில் எச்சரித்தோம். அதனால்தான், திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து, அது ஏற்படுத்தும் ஆபத்துகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.

நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு முன்வைக்கும் ஒரே கோரிக்கை. நீட் தேர்வை ஒழிப்பது மட்டுமே, இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் ஒரு நிரந்தரத் தீர்வாகும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.