நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடை அணிந்து காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம்!

மாணவர்கள் மீதான தடியடியை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.

நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி நேற்று முன்தினம் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இதனைக் கண்டித்து நேற்று டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் முழக்கங்கள் எழுப்பினர்.

இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் நாடாளுமன்றம் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில், மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.