டி20 கிரிக்கெட் : இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்!

இந்தியா – ஜிம்பாப்வே மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது.

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் (ஜூலை 23, 25 மற்றும் 26-ம் தேதி) பங்கேற்கிறது. அதன்படி, இந்தியா – ஜிம்பாப்வே மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. 20 ஓவர் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு இந்திய அணி புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் அயர்லாந்துக்கு சென்று விளையாடியது. அங்கு இரு ஆட்டங்களிலும் மோசமான தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு இந்தியா – ஜிம்பாப்வே போட்டி நடக்க உள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

இந்தியா:

சூர்யவன்ஷி, அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், ஹர்ஷ் துபே அல்லது ஷிவம் துபே, பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய், அசோக் ஷர்மா, மயங்க் யாதவ் அல்லது யாஷ் தாக்குர்.

ஜிம்பாப்வே:

பிரையன் பென்னட், மருமானி, டியான் மையர்ஸ், சிகந்தர் ராசா (கேப்டன்), ரையான் பர்ல், பிராட் இவான்ஸ், பென் கர்ரன், வெஸ்லி மாதேவிர், மில்டன் ஷூம்பா, பிளஸ்சிங் முஜரபானி, ரிச்சர்ட் நரவா.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.