முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் இன்று ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று வெளியாவதை யொட்டி ரசிகர்கள் அதிகாலையிலேயே திரையரங்குகளை நோக்கி திரண்டுள்ளனர்..

தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், பல்வேறு சிக்கல்களைத் தாண்டி இன்று (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.

“ஜனநாயகன்” படம் தமிழகத்தில் ஆயிரம் திரைகளிலும், இந்தியாமுழுக்க 3000 திரைகளிலும், உலகம் முழுக்க ஐந்தாயிரத்துக்கும் அதிகமான திரைகளிலும் இன்று ரிலீஸ் ஆகிறது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்குகிறது. இதனிடையே கர்நாடகா, கேரளா மற்றும் மாநிலங்களில் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படம், விஜய்யின் திரைப்பயணத்தின் இறுதித் திரைப்படம் எனக் கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, சென்னை நகரம் முழுவதும் நேற்று இரவு முதலே திருவிழாக்கோலம் பூண்டது. படம் வெளியாகும் நாளுக்காக பல மாதங்களாக காத்திருந்த ரசிகர்கள், வெளியீட்டுக்கு முந்தைய இரவே திரையரங்குகள் முன்பு திரண்டு உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் காட்சியை காண ரசிகர்கள் அதிகாலையிலேயே திரையரங்குகளை நோக்கி திரண்டுள்ளனர்..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.