GOLD RATE : தங்கம் விலை அதிரடி உயர்வு? – நிலவரம் என்ன…?

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 1,680 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த வாரம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டுள்ளது. அதன்படி நேற்று தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,220 -க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல் சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,05, 760-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல வெள்ளியி விலையும் உயர்ந்து காணப்பட்டது. அதன் படி வெள்ளி விலை கிராமுக்கு 5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 240-க்கும் கிலோ வெள்ளி 2,40,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ரூ.13,430-க்கும், ஒரு சவரன் ரூ.1,680 உயர்ந்து ரூ.1,07,440க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தைப் போன்று வெள்ளி விலையும் உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.5000 உயர்ந்து ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.