உத்தரப்பிரதேசத்தில் பொதுக் குழயில் தண்ணீர் குடித்ததற்காக அடித்துக்கொல்லப்பட்ட இளைஞர்!

உத்தரப்பிரதேசத்தில் பொதுக் குழயில் தண்ணீர் குடித்ததற்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தில் உள்ள சத்ரா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்…

உத்தரப்பிரதேசத்தில் பொதுக் குழயில் தண்ணீர் குடித்ததற்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தில் உள்ள சத்ரா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் கமலேஷ்(24) அங்குள்ள பொதுக் குழாயில் நேற்று முந்தினம் (27.11.2023) இரவு தண்ணீர் குடித்துள்ளார்.  அப்போது அப்பகுதியில் இருந்த சூரஜ் ரத்தோர் மற்றும் அவரது கூட்டாளிகள் தண்ணீர் குடித்ததற்காக கமலேஷை கம்பால் தாக்கியுள்ளனர்.  இந்த தாக்குதலில் காயமடைந்த கமலேஷ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (29.11.2023) பலியானார். இது குறித்து கமலேஷின தந்தை அளித்த புகாரின்பேரில் சூரஜ் ரத்தோர் உள்ளிட்டோரை கைது செய்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  மேலும் பலியான கமலேஷின் உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.