முக்கியச் செய்திகள் குற்றம்

நடுரோட்டில் மனைவியை கொலை செய்த கணவன்!

குடும்பத்தகராறில் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை, கணவர் நடுரோட்டில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் வீரமணி, மோகனாம்பாள் தம்பதியினர். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மோகனாம்பாள் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த கணவர் வீரமணி, நடுரோட்டில் அரிவாளால் வெட்டி அவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய கணவனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் வேகமாக குறையும் கொரோனா

Vandhana

மோடி மீண்டும் பிரதமராக வந்தால்தான் நாடு முன்னேறும்: குஷ்பு

Ezhilarasan

கொரோனா நோய் தொற்றை ஆராய சென்னையில் பகுப்பாய்வு கூடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்