பேருந்தை வழிமறித்த காட்டு யானை; பல மணி நேரம் பயணிகள் தவிப்பு

தென்காசி அருகே பேருந்தை மறித்த காட்டு யானை பல மணி நேரம் வழிவிடாததால் பயணிகள் அவதியடைந்தனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து அச்சன்கோவில் வழியாக புனலூர் செல்லும் பாதையானது, முற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாகும். இந்தப்…

தென்காசி அருகே பேருந்தை மறித்த காட்டு யானை பல மணி நேரம் வழிவிடாததால் பயணிகள் அவதியடைந்தனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து அச்சன்கோவில் வழியாக புனலூர் செல்லும் பாதையானது, முற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாகும். இந்தப் பகுதியில் ஏற்கனவே சிறுத்தை, புலி, யானைகள் நடமாட்டம் இருப்பதாக தொடர்ந்து வாகன ஓட்டிகள் தெரிவித்து வந்த நிலையில் நேற்று மாலை அந்த பகுதியில் யானை ஒன்று சாலையில் நடுவே முகாமிட்டுள்ளது.

அந்த வழியாக சென்ற பேருந்தை கிட்டத்தட்ட பல மணி நேரமாக போகவிடாமல் தடுத்து நிறுத்தியது. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் பெரும் விபத்து ஏற்படும் முன் இந்த யானைகளை வனப்பகுதியில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் தனியார் பேருந்தை யானைகள் வழி மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சாலை என்பது செங்கோட்டில் இருந்து விரைவாக கேரளா செல்லக்கூடிய சாலை ஆகும் என்பதால் இந்த சாலையை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். ட்ரோன் கேமரா மூலம் இந்த யானைகளை கண்காணித்து நிரந்தரமாக சாலையில் வராத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.