கேரளாவில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட யானை தந்தம் – ஒருவரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை பகுதியிலுள்ள சுவர்ணகிரியை சேர்ந்தவர் அருண். இவர் யானை தந்தம் வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அருண் தனது வீட்டில் வைத்திருந்த யானை தந்தததை விற்பனை செய்வதற்காக, கட்டப்பனையிலிருந்து குமுளிக்கு தனது காரில் மறைத்து கொண்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது வல்லக்கடவில் வைத்து வனத்துறையினர் அருணை கைது செய்தனர். பிறகு அவரிடமிருந்து தந்தத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் 12 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய தந்தத்தை குமுளிக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இவரிடம் வனத்துறையினரின் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







