முக்கியச் செய்திகள் தமிழகம்

தென்காசி வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!

தென்காசி வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.

விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்க்க, அம்பை, தென்காசி, ராஜபாளையம், மதுரை, பொள்ளாச்சி வழியாக திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (06030) ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 18 வரை வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சேவை (06029) சிறப்பு ரயில் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 19 வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்திலிருந்து இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.

இந்த ரயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் போத்தனூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் 1 ரயில்வே மேலாளர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரயில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும்” – அஸ்வினி வைஷ்ணவ்

G SaravanaKumar

நியூசிக்கு எதிரான முதல் டெஸ்ட்: கேப்டனாக ரகானே நியமனம்

EZHILARASAN D

இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு பயணச்சீட்டு

G SaravanaKumar