திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த திமுக தொண்டர் ஒருவர் முதலமைச்சரின் பிறந்த நாளுக்கு ஒட்டகத்தை பரிசளித்தார்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் வாழ்த்து கூறுவதற்கு பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது முதலமைச்சருக்கு பரிசளிப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜாகிர்சா என்ற திமுக தொண்டர் ஒட்டகத்தை அழைத்து வந்திருந்தார்.
இதற்கு முன்பு ஆடு, மாடு என ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவர் முதலமைச்சருக்கு பரிசு அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.







