முக்கியச் செய்திகள் தமிழகம்

பிப்ரவரியில் மட்டும் 63.69 லட்சம் பயணிகள் பயணம்: நன்றி தெரிவித்த மெட்ரோ நிர்வாகம்!

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாதம் 63.69 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு கடந்த மாதம் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகள் எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதத்தை விட சற்று குறைவாகவே இருக்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
01.01.2023 முதல் 31.01.2023 வரை மொத்தம் 66,07,458 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.02.2023 முதல் 28.02.2023 வரை மொத்தம் 63,69,282 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 10.02.2023 அன்று 2,61,668 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2023, பிப்ரவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 20,20,027 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 39,85,113 பயணிகள் பயணித்துள்ளார்கள் .

இதையும் படிக்க: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!

நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பயணிகள் பயணித்துள்ளனர். பிப்ரவரி மாதத்தில் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பயணிகள் பயணித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 28 நாட்கள் என்பதால் ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைவாகவே காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களைப் பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி எனத் தெரிவித்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாமக்கலில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் விழிப்புணர்வு!

Jeba Arul Robinson

ஒரே நாளில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

Gayathri Venkatesan

திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவு!

Halley Karthik