முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு ஒமிக்ரான்?

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதிக்க, மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ், உலகத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகள் ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ள நாடுகளுக்கான சர்வதேச விமானப் போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. டெல்டா வைரஸை விட அதிகமாக பரவும் என்பதால், அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்தியாவிலும் விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் மற்றும் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு 11 மணிக்கு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் பயணித்த 134 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற ஒரு பயணி ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி கண்டறியப்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ரஞ்சி கோப்பை பட்டியல் – நடராஜனுக்கு இடமில்லை.

Saravana Kumar

காங்கேயத்தில் கால்நடைப் பூங்கா அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

Niruban Chakkaaravarthi

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!

Halley Karthik