விமான நிலையங்களில் மருத்துவ சோதனை மேற்கொள்ளும் பயணிகளுக்கு உரிய வசதிகளை அளித்திட வேண்டும் என மக்களவையில் எம்பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தினார்.
கோவிட் தொற்று குறித்த விவாதம், மக்களவையில் நேற்றிரவு நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பேசிய திருவள்ளூர் தொகுதி எம்பி ஜெயக்குமார், தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கொரோனா ஊரடங்கை மத்திய அரசு போதிய அவகாசம் இன்றி அறிவித்ததால், புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
முன்னதாக பேசிய சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம், ஒமிக்ரான் தொற்று குறித்த அச்சம் எற்பட்டுள்ள நிலையில், உடனடியாக மூன்றாம் கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க வேண்டும் எனக்கூறினார். மேலும் நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.








