சாதனைகளை படைக்கும் துணிவு டிரெய்லர்; விஜய்யின் ரெக்கார்டை முறியடிப்பாரா அஜித் ?

அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் டிரெய்லர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். விஜய் அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் தற்போது கோலிவுட்டே பரபரப்பாக…

image

அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் டிரெய்லர் பல்வேறு சாதனைகளை படைத்து
வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

விஜய் அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் தற்போது கோலிவுட்டே
பரபரப்பாக இயங்கி வருகிறது. அஜித் நடித்துள்ள துணிவு படமும் விஜய் நடித்துள்ள
வாரிசு படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11 ஆம் தேதி வெளியாக
உள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் இப்படங்களின் அப்டேட்டுகளும்
அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. துணிவு படத்தின் டிரெய்லர் கடந்த 31 ஆம்
தேதி வெளியாகி 5.4 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
அதே போல வாரிசு திரைப்படத்தின் டிரெயிலர் ஜனவரி 4 ஆம் தேதி வெளியாகி 3
கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

image
துணிவு படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 3 கோடி பார்வையாளர்களால்
பார்க்கப்பட்டது. ஆனால் வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தில்
2.3 கோடி பார்வையாளர்களால் மட்டுமே பார்க்கப்பட்டது. இதனால் துணிவு டிரைலரின்
ரெக்கார்ட்டை வாரிசு டிரைலரால் முறியடிக்க முடியவில்லை.

அதே நேரத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 3 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. அந்த சாதனையையும் அஜித்தின் துணிவு டிரெய்லர் முறியடித்து. விஜய் படத்தின் ட்ரெய்லர் சாதனையை முறியடிக்க முடியும என ரசிகர்கள் சவால் விட்ட நிலையில், துணிவு ட்ரெய்லர் பல்வேறு
சாதனைகளை படைத்து வருகிறது. இதனை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.


அதே நேரத்தில் தமிழில் வெளியான படங்களில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின்
டிரெய்லர் 7.5 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. அதே
போல பீஸ்ட் படத்தின் டிரெய்லர் 6 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
இந்த சாதனைகளை துணிவு படத்தின் டிரெய்லர் முறியடிக்குமா என்பதை பொருத்திருந்து
தான் பார்க்க வேண்டும்.

-தினேஷ் உதய்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.