தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே ராட்சத கழுகை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு
காட்டுப்பகுதியில் இன்று காலை ராட்சச கழுகு ஒன்று நின்றுள்ளது. அந்த வழியாக
சென்றவர்கள் தனது நண்பர்களுக்கு ராட்சச கழுகு ஒன்று சாலையோரத்தில் நிற்கிறது
என்று தகவல் தெரிவித்துள்ளார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் அந்தக் கழுகை பார்த்தபோது மிகவும் வயதான கழுகு என்று தெரிந்தது. வயது முதிர்வு காரணமாக பறக்க முடியாமல் அந்தப் பகுதியில் இறங்கிய கழுகு மீண்டும் பறக்க முடியாமல் அங்கேயே நின்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் பிரதான சாலை என்பதால் அந்த
வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு கழுகை பார்த்து
புகைப்படம் எடுத்து சென்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர்,திருச்செந்தூர் வனச்சரகர் கனிமொழி தலைமையிலான வனத்துறையினர் மற்றும் சாத்தான்குளம் கால்நடை மருத்துவர் குழு ஆகியோர் அந்த அரியவகை கழுகை பத்திரமாக மீட்டனர்.