ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள ஏலஞ்சி கிராமத்தைச்
சேர்ந்தவர் பழனிச்சாமி இவர் நேற்று இரவு 9 மணி அளவில் கடம்பூரில் இருந்து
ஏலஞ்சி மலை கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அஞ்சனை பிரிவு என்ற இடத்தில் புதர் மறைவில் இருந்த காட்டு யானை திடீரென்று தாக்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் நிலை தடுமறி கீழே விழுந்த பழனிச்சாமியை காட்டு யானை கடுமையாக
தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கடம்பூர் வனச்சரகம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அந்த காட்டு யானை விரட்டி யடிக்கப்பட்டு
பழனிச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வனத்துறையினர்
விசாரணை நடத்தி வருகின்றனர்.