பொங்கல் பரிசு தொகுப்பில் மண் அடுப்பு மற்றும் மண்பானை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மண்பாண்ட தொழிலாளர்களின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது., இதில் மண்பாண்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஆர் ஈஸ்வரன்.,முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் அரசியல் கட்சியினரிடம் மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக களிமண் எடுப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பதை அரசியல் கட்சியினர் வலியுறுத்த வேண்டுமென அரசியல் கட்சிகளிடம் மண்பாட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு முன்னதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு அளித்த
பேட்டியில் தமிழர் திருநாள் சிறப்பாக கொண்டாடுவதற்காக அதிமுக ஆட்சி காலத்தில் முழு கரும்புடன் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டது.
ஆனால் விவசாயிகள் பற்றி கவலைபடாமல் தமிழக அரசு செங்கரும்பு கொள்முதல்
செய்யவில்லை குற்றம் சாட்டினர். கொரோனா காலத்தில் அதிமுக பொங்கல் பரிசாக
2500ரூபாய் அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கிய போது திமுக 5ஆயிரம் ரூபாய் வழங்க
வேண்டும் என கூறிய நிலையில் தற்போது ஆட்சி பொறுப்பில் உள்ள திமுக மக்களை பற்றி
கவலை இல்லாததால் தான் 1000ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர் என்றார்.
பொங்கல் தொகுப்பில் சர்க்கரை,பச்சரிசி மட்டுமே இடம் பெற்றுள்ளது திமுக அரசின்
நிர்வாகற்ற திறமையை வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற மண்பாண்ட தொழிலாளர்கள் கூட்டத்தில் தமிழக அரசு பொங்கல்
பரிசு தொகுப்பில் மண்பாண்ட தொழிலை பாதுகாக்கும் வகையில் மண்ணடுப்பு மற்றும்
மண்பானை சேர்த்து வழங்க வேண்டும்.
மண்பாண்ட தொழிலை பாதுகாக்க மற்றும் ஊக்கப்படுத்தும் வகையில் தொழிற்பாடம் நவீன முறையில் தொழில் கூடங்கள் அமைக்க வேண்டும்.கொரோனா தொற்று காலமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மழைக்கால நிவாரண நிதி வழங்காத நிலையில் இந்த ஆண்டு பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.