வங்கதேச நெருக்கடி : மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

வங்கதேச நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில், வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில்…

வங்கதேச நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில், வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இட ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக கூறி கடந்த மாதம் அந்நாட்டு மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர்.

 

தொடர் போராட்டத்தையடுத்து, வங்கதேச பிரதமர் பதவியை ஹசீனா ராஜிநாமா செய்ததாகவும், அங்கு ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி இன்று அறிவித்துள்ளார். இந்நிலையில், வங்கதேசத்தில் சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு அமைய உள்ளதாக நாட்டு ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, வங்கதேச நாட்டில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா டெல்லி அருகே உள்ள ஹிண்டண் விமானப்படை தளத்திற்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்தடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் :வெளியானது “ராயன்” படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாட்டர் பாக்கெட்’ வீடியோ பாடல்!

இந்நிலையில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று ( ஆகஸ்ட் – 5) நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் வங்கதேச நிலவரம், ஹசீனா இந்தியா வந்துள்ளது குறித்து ஆலோசனை நடந்ததாக கூறிப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.