தகாத உறவை கண்டித்ததால் ஒருவர் வெட்டி கொலை!

சிவகங்கையில் தகாத உறவை கண்டித்த விவசாயி ஒருவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அதிகரை கிராமத்தைச் சேர்ந்தவர் கரிகாலன். இவர் அப்பகுதியிலுள்ள தோட்டத்தில் தங்கியிருந்து…

சிவகங்கையில் தகாத உறவை கண்டித்த விவசாயி ஒருவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அதிகரை கிராமத்தைச் சேர்ந்தவர் கரிகாலன். இவர் அப்பகுதியிலுள்ள தோட்டத்தில் தங்கியிருந்து அங்கு வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 10:30 மணி அளவில் வீட்டிலிருந்து தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்த கரிகாலனை மர்ம நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில், மறுநாள் காலை வெகுநேரமாகியும் கரிகாலன் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, அவர் தோட்டத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கரிகாலனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.

அதன் முடிவில், கரிகாலனின் மைத்துனரின் மனைவி பத்மா, வாட்டர் சப்ளை செய்யும் சிவா என்பவருடன் தவறான உறவில் இருந்துள்ளார். இதுகுறித்து அறிந்த கரிகாலன் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த இருவரும் கரிகாலனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து, அவர் தோட்டத்திற்கு செல்லும் வழியில் அவரை வழிமறித்து, கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.