காதலால் இணைந்த விஷ்ணு விஷால்- ஜுவாலா குட்டா: பிரத்யேக திருமணப் புகைப்படங்கள்

நடிகர் விஷ்ணு விஷால், பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவை இன்று திருமணம் செய்துகொண்டனர். 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் ஜுவாலா…

நடிகர் விஷ்ணு விஷால், பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவை இன்று திருமணம் செய்துகொண்டனர்.

2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் ஜுவாலா குட்டா. 2011ம் ஆண்டு பேட்மிண்டனுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில், வெண்கல பதக்கத்தை வென்றார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் பல சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் இவரும் நடிகர் விஷ்ணு விஷாலும் காதலித்து வந்தனர். இருவரும் சேர்ந்தே பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஏப்ரல் 13ம் தேதி இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று திருமணம் செய்துகொண்டனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாகவே திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்தது. மேகந்தி நிகழ்ச்சி மற்றும் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விஷ்ணு விஷாலின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஜீவா, ராட்சன், முண்டாசுப்பட்டி, நேற்று இன்று நாளை, மாவீரன் கிட்டு, நீர்ப்பறவை, காடன் போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார். ஜீவா, முண்டாசுப்பட்டி, மாவீரன் கிட்டு, நீர்ப்பறவை போன்ற தனித்துவமான திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.