பலத்த சூறைக்காற்றால் 1 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மீனாட்சிபுரம் பகுதியில் பலத்த சூறைக்காற்று காரணமாக, சுமார் ஒரு ஏக்கர் பரப்பிலான மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மீனாட்சிபுரம் பகுதியில் பலத்த சூறைக்காற்று காரணமாக, சுமார் ஒரு ஏக்கர் பரப்பிலான மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன.

விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வத்திராயிருப்பு அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் பூமிநாதன் என்பவர் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் விவசாயம் செய்து வந்தார். இந்த பகுதியில் வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக சுமார் ஒரு ஏக்கர் பரப்பிலான மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது.

தற்போது இந்த பயிர்கள் கதிர் விட்டு மகசூளுக்கு தயாராக இருந்த நேரத்தில் இதுபோன்று சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பத்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

—ரூபி.காமராஜ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.