செங்கத்தில் தக்காளி விலை வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை!

செங்கம் மற்றும் அதன் சுற்றுவார பகுதியில், தக்காளியை 2 ரூபாய் விலைக்கு கேட்டதால் விரக்தி அடைந்த விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார…

செங்கம் மற்றும் அதன் சுற்றுவார பகுதியில், தக்காளியை 2 ரூபாய் விலைக்கு கேட்டதால் விரக்தி அடைந்த விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி பயிரிட்டு தற்போது அறுவடை செய்து வருகின்ற நிலையில் தோக்கவாடி பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி மற்றும் அவரது சகோதரர் தனது நிலத்தில் பயிரிட்டு இருந்த தக்காளியை கமிஷன் மண்டிக்கு எடுத்துச் சென்றபோது  அங்கு 2 ரூபாய்க்கு கேட்டதால் விரக்தி அடைந்த இவ்விரு விவசாயிகளும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கொட்டி வீசினா்.

மேலும், கடன் வாங்கி பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயானது
முதலீட்டை விட குறைவாக  கிடைப்பதால் வேதனையாகயுள்ளது எனவும், இதுபோன்று விவசாயிகளின் நிலை இருந்தால் முற்றிலும் விவசாயம் பாதிக்கும் எனவும்  தங்களது வேதனையை தெரிவித்தனர்.

—-ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.