உதகை நீதிமன்றத்தில் காவலர் ஒருவர் வழக்கு சம்பந்தமாகச் சென்றபோது மீசையை ஒழுக்கமாக வெட்ட வேண்டும் என நீதிபதி கூறியதையடுத்து மீசையை வெட்டிவிட்டு அந்த காவலர் நீதிமன்றத்திற்குள் சென்றுள்ளார்.
நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்குக் காவலர் ராஜேஷ் கண்ணன் வழக்கு சம்பந்தமாகச் சென்றுள்ளார். அப்போது, மீசையை ஒழுக்கமான முறையில் சரி செய்த பின் நீதிமன்றத்திற்கு நுழைய வேண்டும் எனக் கோபத்துடன் நீதிபதி கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், உடனடியாக நீதிமன்றத்திலிருந்து சென்ற அந்த காவலர் தனது மீசையை வெட்டியுள்ளார்.
அண்மைச் செய்தி: ’பாஸ்தா சாப்பிட்டதால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்’
மீசையைச் சரி செய்த பின்பு, நீதி மன்றத்திற்குள் நுழைந்த அந்த காவலர் தனது பணியை முடித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். காவலர் ராஜேஷ் கண்ணன் கூடலூர் அருகே உள்ள அம்பலமூல காவல் நிலையத்தில் பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் முடிகளைத் தலைமை ஆசிரியர்கள் வெட்டிவிட்டு எச்சரித்து வரும் சூழ்நிலையில், தற்போது நீதிபதிகள் காவலர்களை எச்சரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.








