பாஸ்தா சாப்பிட்டதால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

விழுப்புரம் அருகேயுள்ள அன்னியூரில் இளம் பெண் ஒருவர் தனியார் உணவகத்தில் பாஸ்தா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அன்னியூரை சேர்ந்தவர் பிரதிபா. இவர் விஜயகுமார் என்பவரை காதலித்து கடந்த…

விழுப்புரம் அருகேயுள்ள அன்னியூரில் இளம் பெண் ஒருவர் தனியார் உணவகத்தில் பாஸ்தா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அன்னியூரை சேர்ந்தவர் பிரதிபா. இவர் விஜயகுமார் என்பவரை காதலித்து கடந்த மாதம் 13ம் தேதி பெற்றோர்களின் எதிர்ப்பினை மீறி காதல் திருமணம் செய்து கொண்டு அன்னியூரில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் நண்பர்களுடன் சுற்றுலா சென்று மாலை வீட்டிற்கு வந்த போது திருவாமாத்தூர் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் வொயிட் பாஸ்தா என்ற உணவினை வாங்கி சாப்பிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். இரவில் பிரதிபா உணவு செரிக்காமல் வாய்ந்தி எடுக்கவே அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கணவரான விஜயகுமார் சேர்த்துள்ளார். ஆனால் பிரதிபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெண்ணின் பெற்றோர்கள் கஞ்சனூர் காவல் நிலையத்தில் தனது மகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தால் இறந்து விட்டதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கஞ்சனூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். இறந்த பெண் இதய அடைப்பு காரணமாக மாத்திரை எடுத்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

உயிரிழந்த பிரதிபாவின் உடலை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யும் போது தான்  இளம்பெண் பாஸ்தா உணவு செரிக்காமல் இறந்தாரா அல்லது உணவில் விஷம் கலந்து இறந்தாரா என்பது தெரியவரும். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து பிரதிபாவின் கணவரிடம் விசாரனை செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.