முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மகேஷ் அளித்த பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து, பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகி நற்பெயரும், நன்மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், மான நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும், தொடர்ந்து அவதூறு கருத்துக்களை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி இருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘பெரிய மீசையுடன் வந்த காவலர்; எச்சரித்த நீதிபதி’
சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்த 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் ஆகியோர் இடையிலான பிரச்சினை தொடர்பான, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மீன் வலை உற்பத்தி நிறுவன நிர்வாகியும், மருமகனின் சகோதரருமான மகேஷ், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டார்.