ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில், மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் இடத்தை பர்கூர் மலைப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இதில் அந்தியூர் பேருந்து நிலையத்திலிருந்து தாமரை கரை அடுத்த தேவர் மலை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு மினி பேருந்தை ஓட்டுநர் முரளி என்பவர் நடத்துனர் மாதேசன் உடன் 30 க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்து சென்று கொண்டிருந்தபோது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பர்கூர் மலைப்பகுதியில் பெய்த அதிகப்படியான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் பேருந்தில் முன் சக்கரம் இறங்கி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி : ஆதி திராவிட மக்களுக்கு தனி நிதி நிலை அறிக்கை வேண்டும் – பூவை ஜெகன் மூர்த்தி
இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உள்பட பேருந்தில் பயணம் செய்த இரண்டு பயணிகள் காயம் அடைந்தனர். இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.