ராஜஸ்தான் கொள்ளையர்களிடம் இருந்து திருடிய பொருட்களை மீட்ட போலீசார்

திருச்சியில் ராஜஸ்தான் கொள்ளையர்களால் திருடப்பட்ட சொதுக்களை திருச்சி போலீசார் மீட்டுள்ளனர். திருச்சி மாநகரில், பல்வேறு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சங்கர், ரத்தன், ராம் பிரசாத் மற்றும் ராமா ஆகிய 4…

திருச்சியில் ராஜஸ்தான் கொள்ளையர்களால் திருடப்பட்ட சொதுக்களை திருச்சி போலீசார் மீட்டுள்ளனர்.

திருச்சி மாநகரில், பல்வேறு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை
சேர்ந்த சங்கர், ரத்தன், ராம் பிரசாத் மற்றும் ராமா ஆகிய 4 பேர் கடந்த நவம்பர் மாதம்
கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து, பத்து வழக்குகளில் கொள்ளை போன 254
சவரன் நகையில் 37 சவரன் மற்றும் 2 லட்சம் பணத்தை ராஜஸ்தானிலிருந்து மீட்டு,
விமான நிலையம் திரும்பும்போது மீதமுள்ள நகைகளுக்கு பதிலாக, 25 லட்சம் பணம்
தருவதாக கொள்ளையர்கள் கூறியுள்ளனர்.

இந்த தகவலையடுத்து, அங்கு சென்ற காவலர்களை பொய் புகார் கூறி, லஞ்ச ஒழிப்பு
போலீசாரிடம் சிக்க வைக்க கொள்ளையர்கள் முயற்சித்துள்ளனர். மேலும், ராஜஸ்தான்
மாநில ஊழல் தடுப்பு பிரிவு போலீசார், திருச்சி போலீசாரை விசாரணைக்கு அழைத்து
சென்றனர். அவர்களிடம் கொள்ளையர்கள் குறித்து உரிய ஆவணங்களை கொடுத்த
பின்னர், அவர்கள் ஒப்புதலோடு கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டு,
திருச்சி போலீசார் தற்போது தமிழ்நாடு திரும்புகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.