முக்கியச் செய்திகள் கொரோனா

முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து இன்று ஒரே நாளில் 1,16,500 ரூபாய் அபராதம் வசூல்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து இன்று ஒரே நாளில் 1,16,500 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதையடுத்து, அனைவரும் முககவசம் அணிவது கட்டாயம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் சில தினங்களுக்கு முன் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நேற்று எச்சரித்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், கொரோனா நோய் பெருந்தொற்று பாதிப்பு தற்போது கணிசமாக உயரத் தொடங்கியுள்ளதால் தடுப்பூசி செலுத்துவது, பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்வது, அடிக்கடி சோப் பயன்படுத்தி கை கழுவுதல், பொது இடங்களில் எச்சில் துப்பாமல் இருப்பது ஆகியவற்றைப் பொதுமக்கள் கடைப்பிடிக்கத் தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

அண்மைச் செய்தி: ‘கார்கி டிரைலர்: ட்விட்டரில் வெளியிட்ட நடிகர் சூர்யா’

இந்நிலையில், இன்று ஒரே நாளில் 1,16,500 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மொத்தம் மண்டலம் 15-ல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மண்டலம் 1-ல் குறைந்தபட்சமாக 5 பேருக்கு ரூபாய் 2,500ம், மண்டலம் 5-ல் அதிகபட்சமாக 33 பேருக்கு ரூபாய் 16,500ம் விதிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram