கார்கி டிரைலர்: ட்விட்டரில் வெளியிட்ட நடிகர் சூர்யா

சாய்பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள கார்கி திரைப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிப்பு, நடனம், என ரசிகர்களைக் கவர்ந்த சாய் பல்லவி, வரிசையாக முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன்…

சாய்பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள கார்கி திரைப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிப்பு, நடனம், என ரசிகர்களைக் கவர்ந்த சாய் பல்லவி, வரிசையாக முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சாய்பல்லவி நடிப்பில் ’கார்கி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சாய் பல்லவியின் பிறந்தநாள் அன்று படக்குழுவினர் தலைப்பு போஸ்டரை வெளியிட்டனர். அந்த போஸ்டர் அப்போது ரசிகர்களைக் கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவியது.

அண்மைச் செய்தி: ‘’ஏரியா சபை’ – தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கு சிபிஐ(எம்) வரவேற்பு’

https://twitter.com/Suriya_offl/status/1545026170517094400?t=X487tS5Yg6jODh0X_kwYXA&s=08

அதேசமயம், சாய்பல்லவி கார்கி படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அந்த காத்திருப்புக்குப் பதிலளிக்கும் விதமாக பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடசன்ஸ் உடன் இணைந்து கார்கி படத்தை சூர்யா, ஜோதிகா – 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வழங்க இருப்பதாக அறிவித்தனர். இந்நிலையில், சாய்பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள கார்கி திரைப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது ரசிகர்களைக் கவர்ந்த அந்த டிரைலர் சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவிவருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.