எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று கட்சிப் பாகுபாடின்றி புதிய கல்லூரிகளை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. 152 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தனதுதொகுதியில் நீண்ட காலமாக அரசு கல்லூரி இல்லமல் இருந்ததாக கூறினார். தனது தொகுதி மிகவும் பின் தங்கிய பகுதியைக் கொண்டது, இதனால் மக்களின் கோரிக்கையை ஏற்று கலைக்கல்லூரி அமைத்த முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி என தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பொன்முடி, ஆட்சிக்கு வந்து ஓராண்டில் 20 கல்லூரிகளை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளதாக கூறினார். புதிய கல்லூரிகள் வேண்டும் என அமைச்சர்கள் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், பாமக முன்னாள் தலைவர் ஜி.கே.மணி, பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் உள்ளிட்டோரின் கோரிக்கையையும் ஏற்று கட்சி வேறுபாடில்லாமல் நிறைவேற்றித்தந்திருக்கிறார் என்றார். கட்சி வேறுபாடு இல்லாமல் முதலமைச்சர் கல்லூரிகளை திறந்து வைத்துள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி பெருமிதம் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்