நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, பெண் அழகு கலை நிபுணர் ஒருவர் தன் விரல் நகங்களில் விஜய்யின் உருவத்தை வரைந்து வித்தியாசமான முறையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள், அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்தும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த விறல் நகங்களை அலங்காரம் செய்யும் அழகு கலை நிபுணரான பட்டதாரி பெண் ஒருவர் தனது நகங்களில் விஜயின் உருவம் மற்றும் படங்களின் பெயர்களை வரைந்து வித்தியாசமான முறையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரபிந்தோ வீதியில் விரல் நகம் அலங்காரம் செய்து வரும் பட்டதாரி பெண் நந்தினி, பல்வேறு காலங்களில் சமூக விழிப்புணர்வுடன் கூடிய பல்வேறு ஓவியங்களை தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் நகங்களில் வரைந்து அலங்காரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று விஜய்யின் 49-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரின் உருவம், படங்களின் பெயர்களான, தளபதி, லியோ, தலைவா, விஜய் என தன் நகங்களில் வரைந்து விஜய்க்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா