ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தின் ‘வாடி என் கரீனா சோப்ரா’ என்ற தலைப்பில் நடிகர் கார்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் 2007ம் ஆண்டு ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, இதுவரை 25 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். இவரது நடிப்பில் பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் படங்களில் ஆரம்பித்து தற்போதைய சர்தார், பொன்னியின் செல்வன் படங்கள் வரை பெரும்பாலும் ரசிகர்கள் மனநிறைவு பெறும் விதமாகவே நடித்துள்ளார்.
நடிகர் கார்த்தியும் சந்தானமும் இணைந்து சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் காமெடி காட்சிகள் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன. அதிலும் எம்.ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ கலவையான விமர்சனத்தை பெற்றாலும், நகைச்சுவை ரீதியாக பெறும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் கரீனா சோப்ரா என்ற பெயரில் பெண் வேடத்தில் சந்தானம் ஒரு சில காட்சிகள் நடித்திருப்பார். அதில் ‘சொக்க தங்கம் சொக்க தங்கம் ஜுவல்லரி, சொக்க வைக்கும் சொக்க வைக்கும் ஜுவல்லரி’ என்ற வசனம் மிகவும் பிரசித்திபெற்றது. இந்நிலையில், நடிகர் கார்த்தி ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தின் #Throwback புகைப்படத்தைப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதில் ‘வாடி என் கரீனா சோப்ரா’ என்று தலைப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.







