தசை சிதைவால் பாதிக்கப்பட்ட இரு மகன்களுடன் ஒலிம்பியாட் போட்டியை பார்க்க வந்த குடும்பம்

முதலமைச்சரின் தனி பிரிவிற்கு கடிதம் எழுதி தலைமைச் செயலரின் முயற்சியினால் ஒலிம்பியாட் போட்டியை பார்க்க வாய்ப்பு கிடைத்ததாக மகிழ்ச்சி. 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் தமிழக அரசால்…

முதலமைச்சரின் தனி பிரிவிற்கு கடிதம் எழுதி தலைமைச் செயலரின் முயற்சியினால் ஒலிம்பியாட் போட்டியை பார்க்க வாய்ப்பு கிடைத்ததாக மகிழ்ச்சி.

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் தமிழக அரசால் நடத்தப்பட்டுள்ளது. இப்போட்டிக்கான தொடக்க விழா வெகு விமரிசையாக நடைப்பெற்றது, இதில் பிரதமர் மற்றும் ஆளுநர், முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்த்ற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியானது இன்றுடன் நிறைவு பெற்றது. இதற்கான நிறைவு விழா இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்குகிறார்.

ஹைதாரபாத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு,சௌரின்(வயது 15) மற்றும் ப்ரணீத் (13 வயது ) என இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் உடல் தசை சிதைவு நோய் ஏற்பட்டு நடக்க முடியாத சூழ்நிலை உண்டானது. இருவரும் செஸ் போட்டியில் மிகுந்த ஆர்வம் உடைவர்கள் இருந்தனர். இதில் சௌரின் 2017 ம் ஆண்டு நடைப்பெற்ற மாற்று திறனாளிகளுக்கான தேசியஅளவிலான செஸ் போட்டியில் பங்கேற்று விளையாடியவர். ஹைதாரபாத்தை சேர்ந்த இவர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்வையிட முயற்சி செய்துள்ளனர்.

இதனால் ஹைதராபாத்தில் உள்ள நண்பர்கள் மூலம் முதல்வரின் தனிப்பிரிவிற்கு தொர்பு கொண்டு தமிழக தலைமை செயலாளரின் உதவியோடு செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்த்துள்ளனர். அதுமட்டும் இன்றி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை காணவும், அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த சீனிவாசன், இந்த வாய்ப்பு மூலம் தங்கள் குழந்தைகளின் ஆசை நிறைவேறியதாகவும், மகிழ்ச்சியுடன் போட்டியை கண்டு களித்ததாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோருக்கு நன்றியையும் அவர் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.