இடி தாக்கியதில் பசு மாடும், தொழிலாளியும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே, இடி தாக்கியதில், பசு மாடும், தொழிலாளியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பரம்புப்பட்டியைச் சேர்ந்த கட்டட தொழிலாளியான பாலு, தமது வீட்டின் அருகே, மாடுகளுக்கு தீவனம் வைத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது, இடி…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே, இடி தாக்கியதில், பசு மாடும், தொழிலாளியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பரம்புப்பட்டியைச் சேர்ந்த கட்டட தொழிலாளியான பாலு, தமது வீட்டின் அருகே, மாடுகளுக்கு தீவனம் வைத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது, இடி தாக்கியதில், பாலுவும், பசு மாடும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர். பசு மாட்டை ஆய்வு செய்த கால்நடை மருத்துவர்கள், அருகே உள்ள விவசாய நிலத்தில் அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.