கர்நாடக மாநிலம், பந்திபூர் வனப்பகுதியில், ரயில்வே தடுப்பு வேலியை யானை ஒன்று லாவகமாக தாண்டிச் செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பந்திப்பூர் தேசியப்பூங்கா உள்ளது. இந்த வன உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் வெளியேறுவதை தடுப்பதற்காக, வனப்பகுதியொட்டியுள்ள ரயில்வே தண்டவாளம் அருகே, இரும்பு தடுப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பந்திப்பூர் தேசிய பூங்காவில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, 8 அடி உயரம் கொண்ட இரும்பு தடுப்பை, லாவகமாக தாண்டி சென்றது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.







