ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, மேய்ச்சலுக்குச் சென்ற 2 ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரனுக்கு, தமது விவசாய தோட்டத்தில், ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை, ஒரு ஆட்டை அடித்துக்கொன்றுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோன்று பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் ஆட்டையும் சிறுத்தை தாக்கிக் கொன்றுள்ளது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், இறந்த ஆடுகளின் உடல்களை மீட்டு ஆய்வு செய்தபோது, அவற்றை சிறுத்தை தாக்கி கொன்றது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, விவசாய தோட்டங்களில் சுற்றித்திரியும் சிறுத்தையைப் பிடிக்க, 3 இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.